Sunday, May 26, 2019

நானே நான்



பல இதயங்களுடன் பல நினைவுகளை,கற்பனைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று என் இதயம் விரும்பியது
எனவே பல அன்பர்களாகிய உங்கள் இதயங்களுடன் உரையாட,உறவாட விழைகிறேன்.


என்னை பற்றிய செய்திகளை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது நமக்கிடையே நல்லதொரு புரிதலை உண்டாக்கும் என்பதால் சில தகவல்களை தெரிவிக்கிறேன்.

நான் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் காவேரி ராஜ புரம் என்னும் சிற்றூரில் தோன்றினேன். எமக்கு மிக அண்மையில் உள்ள திருவலாங்காடையானின் திருவருள் பெறும் வாய்ப்புக் கிட்டியது.

அப்போதிலிருந்து மேடு பள்ளங்களைத் தாண்டி முன்னேறி கொண்டுதான் இருக்கிறேன்.
பார்வையற்றவனாகிய நான் படித்து முன்னேறி முனைவர் பட்டம் பெற்று திருப்பதி திருவேங்கடவன் பல்கலைகழகத்தில் தெலுங்கு பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன்

சிந்தனைக்கு ஓய்வு இல்லாததால் பல நூல்களைப் படைக்க தொடங்கினேன்.
சுமார் 30 புத்தகங்களை எம்மை கொண்டு இறைவன் படைத்தான்
அவற்றின் மீது ஆய்வு நடந்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் என் தமிழ் கவிதை புத்தகத்திற்காக
ஒரு எம்ஃபில் வந்தது.
திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் இரண்டு தெலுங்கு நூல்களுக்காக பி எச்டி  வந்தது.
மற்ற பல நூல்களுக்கான பிஎச்டி வரும் தருவாயில் உள்ளது.
என் மேற்பார்வையில் 12 மாணவர்கள் முனைவர் பட்டமும்,8 மாணவர்கள் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளனர்.

தாய்மொழி தெலுங்கேயானாலும் தமிழுக்கும் தெலுங்கிற்கும் வேற்றுமை உணரா வண்ணம் என் மனநிலை அமைந்துவிட்டது.
தெலுங்கில் பல செய்யுட்கள்,பல கதைகள் எழுதியிருக்கிறேன்.
தமிழிலும் ஆரம்பிக்க என் இதயம் துடிக்கிறது.

அன்பர்களே நாம் ஒருவரை ஒருவர் உணர்ந்து,உரையாடி,உறவாடும் உன்னத வாய்ப்பிற்காக உள்ளம் ஏங்குகிறது.
தோய்வு சற்றுமின்றி தொடர்பில் இருப்போம், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.....

---
ஜெ. முனிரத்தினம்.

3 comments:

  1. தொடர்பில் இணைவோம். வணக்கம்.

    ReplyDelete
  2. very glad to be associated with you. we will be in touch and share our experiences and thoughts whenever possible.

    ReplyDelete
  3. ஐயா நாங்களும் இணைந்து கொள்கிறோம் தங்கள் வலைத்தளத்துடன். தொடர்கிறோம்

    குறித்துக் கொண்டுவிட்டோம் ஐயா.

    துளசிதரன், கீதா

    ReplyDelete